Unnai Kaana Song Lyrics

Natpu·1986

Movie
Natpu
Singer
Jayachandran and P. Susheela
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்
தினம் இரண்டாய் மனம் வெடிக்க
கடை விழிகள் நீர் வடிக்க.....

ஆண்: உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

ஆண்: அக்கம் பக்கம் நானும் பார்த்து
முத்தம் தந்தேன் முந்நூறு

பெண்: எண்ணிக் கொள்ள நேரம் இல்லை
இன்னும் கொஞ்சம் முன்னேறு

ஆண்: மோகத்திலே கண்ணன் இவன்
முத்தத்திலே வள்ளல் இவன்

பெண்: அன்பே அள்ளிக் கொள்ள வா
அங்கம் எங்கும் புதையல்

ஆண்: கொள்ளை கொள்ளும் நேரம்
சத்தம் போடும் வளையல்

பெண்: பிரியாதே எனை என்று
வளையல்கள் வாதாடுதோ....

ஆண்: உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

பெண்: நம்மைக் கண்டு நாணம் கொண்டு
விண் மீன்களும் கண் மூடும்

ஆண்: வெட்கம் எனும் பாரம் கொண்டு
பெண்மை இன்று திண்டாடும்

பெண்: ரோஜா மொட்டு பூவானது
இப்போதுதான் ஆளானது

ஆண்: தேகம் எங்கும் ஈரம்
தேனே கொஞ்சம் திரும்பு

பெண்: கோழி கூவும் நேரம்
போதும் போதும் குறும்பு

ஆண்: இந்த வேளை இன்ப லீலை
இடைவேளை கூடாதடி

பெண்: உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்.....

ஆண்: தினம் இரண்டாய் மனம் வெடிக்க
கடை விழிகள் நீர் வடிக்க.....

பெண்: உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்.....

A little space to find your voice.

About Unnai Kaana

Unnai Kaana is a song from Natpu (1986). Performed by Jayachandran, P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer