Vanna Poongavanam Song Lyrics

Eeramaana Rojavae·1991

Eeramaana Rojavae movie poster
Singer
K. S. Chithra
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

குழு: ஓஹோ ஓஓஓஓ
ஓஹோ ஓஓஓஓ
................................

பெண்: { வண்ண பூங்காவனம்
சின்ன பிருந்தாவனம்

குழு: இனிய கவிதை
உதயமாகுது } (2)

பெண்: தென்றல் தாலாட்டுது
ஜீவ ராகம் அன்பு பாராட்டுது
மோக கீதம் இங்கு பூபாள
சங்கீதம் பாடு

பெண்: { வண்ண பூங்காவனம்
சின்ன பிருந்தாவனம்

குழு: இனிய கவிதை
உதயமாகுது } (2)

பெண்: நீல வானிலே மேகம்
போலவே ரெக்கை கட்டி ஆட
எண்ணுதே வெள்ளம் போலவே
பொங்கி ஓடியே நெஞ்சம் இன்று
தாளம் போடுதே

குழு: நீல வானிலே மேகம்
போலவே ரெக்கை கட்டி ஆட
எண்ணுதே வெள்ளம் போலவே
பொங்கி ஓடியே நெஞ்சம் இன்று
தாளம் போடுதே

பெண்: கானம் பாடும் வானம்
பாடி நாம் தானே கவலை இந்த
வாழ்வில் ஏது

குழு: ஹே ஹே ஹே

பெண்: மேகம் போல மின்னல்
போல வாழ்வோமே இன்ப
மாலை நீயும் சூடு

குழு: ஹே ஹே ஹே

பெண்: வாலிபம் தங்க மேடை
ஆடி பார்ப்போம் இந்த வேலை
அன்புக்கிங்கு பஞ்சமில்லை
வஞ்சமில்லையே

பெண்: { வண்ண பூங்காவனம்
சின்ன பிருந்தாவனம்

குழு: இனிய கவிதை
உதயமாகுது } (2)

பெண்: அன்பு ஒன்று தான்
தேவையானது அச்சம் இங்கு
தேவை இல்லையே ஆணும்
பெண்ணுமே நேசம் கொள்வது
என்றும் இங்கு பாவம் இல்லையே

குழு: அன்பு ஒன்று தான்
தேவையானது அச்சம் இங்கு
தேவை இல்லையே ஆணும்
பெண்ணுமே நேசம் கொள்வது
என்றும் இங்கு பாவம் இல்லையே

பெண்: அன்பினாலே நாளை
நாமும் ராஜாங்கம் ஆள
வேண்டும் ஆள வேண்டும்

குழு: ஹே ஹே ஹே

பெண்: ஜாதி பேதம் பார்க்கும்
மூட பஞ்சாங்கம் ஓட வேண்டும்
ஓட வேண்டும்

குழு: ஹே ஹே ஹே

பெண்: எந்த ஊரும் சொந்த
ஊர்தான் எந்த நாடும் நமது
நாடு உள்ளம் இங்கே உள்ளவர்க்கு
சொந்தமுண்டு ஹோய்

பெண்: { வண்ண பூங்காவனம்
சின்ன பிருந்தாவனம்

குழு: இனிய கவிதை
உதயமாகுது } (2)

பெண்: தென்றல் தாலாட்டுது
ஜீவ ராகம் அன்பு பாராட்டுது
மோக கீதம் இங்கு பூபாள
சங்கீதம் பாடு

பெண்: வண்ண பூங்காவனம்
சின்ன பிருந்தாவனம்

குழு: இனிய கவிதை
உதயமாகுது

A little space to find your voice.

About Vanna Poongavanam

Vanna Poongavanam is a song from Eeramaana Rojavae (1991). Performed by K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer