Malarae Nalamaa Song Lyrics

Urimai·1985

Movie
Urimai
Singer
K. J. Yesudas and S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மலரே நலமா
மடிமேல் விழவா

பெண்: விரியும் இதழ்வசம்
வழியும் மதுரசம்

ஆண்: அரச இலையில் உரசும் நிலையில்
சரசம் எத்தனையோ

பெண்: இதழ் அமுத சுரபி
வழிய வழிய
வழங்கும் முத்திரையோ

ஆண்: மலரே நலமா......
மலரே.....

ஆண்: தென்பாண்டி முத்துக்கள் முப்பது
சிப்பியில் வைப்பது இதழ்

பெண்: அம்மாடி எத்தனை முத்திரை
நித்தமும் வைப்பது அதில்

ஆண்: கோடி கொடுத்திட வேணுமடி

பெண்: ஆடி இளைத்தது வஞ்சிக்கொடி

ஆண்: ஆடை இரவினிலே

பெண்: கலைந்தது ஆசை இடையினிலே

ஆண்: அலைந்தது போதை மனதினிலே

பெண்: எழுந்தது பூவை விழி அதிலே

ஆண்: சிவந்தது

பெண்: சிவந்த கண்ணில் காதல்
தீப ஒளியிலே கலைவிழா

ஆண்: மலரே நலமா...
மலரே...

பெண்: வெண்மேகம் பந்தலை இட்டது
முத்துக்கள் கொட்டுது அதோ

ஆண்: பெண்தேகம் பஞ்சணை இட்டது
நெஞ்சினை தொட்டது இதோ

பெண்: சிந்தும் மழையினில் நீ குளிக்க

ஆண்: சேலை குடையினை நீ பிடிக்க

பெண்: சொர்க கதவுகளோ

ஆண்: திறந்தன சோதி கருவிழிகள்

பெண்: சிவந்தன காதல் கனவுகளோ

ஆண்: பலித்தன கன்னக் கனிச்சுளைகள்

பெண்: இனித்தன

ஆண்: நயன பாஷை பேசி பேசி
இளமைகள் இணைந்தன

பெண்: மலரே நலமா
மடிமேல் விழவா

ஆண்: விரியும் இதழ்வசம்
வழியும் மதுரசம்

பெண்: அரச இலையில் உரசும் நிலையில்
சரசம் எத்தனையோ

ஆண்: இதழ் அமுத சுரபி
வழிய வழிய
வழங்கும் முத்திரையோ

பெண்: மலரே நலமா.....
மலரே.....

A little space to find your voice.

About Malarae Nalamaa

Malarae Nalamaa is a song from Urimai (1985). Performed by K. J. Yesudas, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer