Abinayam Kaattu Nadai Song Lyrics

Vidiyum Varai Kaathiru·1981

Singer
S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஹா...ஆஆ..ஆஅ...ஆஅ..ஆஆ...
அபிநயம் காட்டு நடைப் போட்டு
அபிநயம் காட்டு நடைப் போட்டு
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
அபிநயம் காட்டு நடைப் போட்டு......

பெண்: மாமல்லன் சிவகாமி மறுபிறப்போ ஆ....ஆ...
மாமல்லன் சிவகாமி மறுபிறப்போ
மானாக மீனாக மை எழுதிய விழிகள் மலர
அபிநயம் காட்டு நடைப் போட்டு......
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
அபிநயம் காட்டு நடைப் போட்டு......

பெண்: குயிலினம் நானென்று குரல் வளம்தான் கண்டு
உலகமே அறியாததோ
குயிலினம் நானென்று குரல் வளம்தான் கண்டு
உலகமே அறியாததோ
இனிமை என் சாரீரம் புதுமை என் சங்கீதம்
உனக்கிது புரியாததோ

பெண்: பாட்டின்றி ஏதம்மா பரதக்கலை..ஆ...ஆ...
பாட்டின்றி ஏதம்மா பரதக்கலை
நான் பாட நீயாடு நூலிடையது நெளிய நெளிய
அபிநயம் காட்டு நடைப் போட்டு......

பெண்: பெண்ணாட இரு கண் தானாட
பாதங்கள் ஜதிகளும் பயில
சொல்லாத புது சந்தம் சொல்ல
துள்ளாத இளம் கண்கள் துள்ள

பெண்: புதுமையான நடனம் தோகை ஆட
அருமையான கீதம் பாவை பாட
ஒருவர் திறமை ஒருவர் அறிய உதவட்டுமே
ஆடல் என்பதனை பாடல் வெல்லுமடி
பாடல் வெல்லும் அதை காலம் சொல்லுமடி
உனது மனது எனது கலையை உணரட்டுமே
இளங்குயில் இசைக்கையிலே
மயங்கிடும் இயற்கைகளே
கண்மணியே........பொன்மணியே.......
ஸ்வரம் : ...........................

A little space to find your voice.

About Abinayam Kaattu Nadai

Abinayam Kaattu Nadai is a song from Vidiyum Varai Kaathiru (1981). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer