Chinna Poo Chinna Poo Song Lyrics

Japanil Kalyanaraman·1985

Japanil Kalyanaraman movie poster
Singer
S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: சின்னப்பூ சின்னப்பூ
கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா
என்னைப்போல் கன்னிப்பூ

பெண்: இளவேனில் காலம் இளமாலை நேரம்
இன்பத்தை அள்ளி இறைக்கும்
சொர்க்கத்தின் அந்தப்புரம் இதுவோ

பெண்: சின்னப்பூ சின்னப்பூ
கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா
என்னைப்போல் கன்னிப்பூ

பெண்: பூவெல்லாம்
மெளன பாஷைகள்
பேச நான் என்ன சொல்ல ஓ.....
நாளெல்லாம் அந்தி நேரத்தில்
எந்தன் நெஞ்சத்தைக் கிள்ள ஓ......

குழு: ஆஆ......ஆஆ.....ஆஆ.....
ஆஆ......ஆஆ.....ஆஆ.....

பெண்: ஏதோ ஏதேதோ எண்ணம் கூட
உள்ளம் என் உள்ளம் ஊஞ்சல் ஆட
கோடை நாட்களில் காமன் பண்டிகை
காற்றும் பூவும்தான்.........
காதல் பாட்டுப் பாடும் வசந்த விழா

பெண்: சின்னப்பூ சின்னப்பூ
கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா
என்னைப்போல் கன்னிப்பூ

குழு: .....................

பெண்: மேகங்கள் புத்தன் கோயில்கள்
தேடி ஊர்கோலம் செல்ல ஓ.....
ராகங்கள் கட்சிக் கூட்டங்கள்
பாடி வாழ்த்துக்கள் சொல்ல ஓ......

குழு: ஆஆ......ஆஆ.....ஆஆ.....
ஆஆ......ஆஆ.....ஆஆ.....

பெண்: இன்பம் கொண்டாடும் மக்கள் இங்கே
மண்ணில் உண்டான சொர்க்கம் இங்கே
நூறு நாடுகள் வாழும் மாந்தர்கள்
கூடும் நாளிலே நேசம் பாசம்
யாவும் விளைந்திடுமோ

பெண்: சின்னப்பூ சின்னப்பூ
கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா
என்னைப்போல் கன்னிப்பூ

பெண்: நூலாடைத் தொட்டுப் போராடும்
காற்றே நீ கொஞ்சம் இங்கே நில்....
நான் கூட வண்ண பூ மாலை
நாள் எந்த நாளோ சொல்....

குழு: ஆஆ......ஆஆ.....ஆஆ.....
ஆஆ......ஆஆ.....ஆஆ.....

பெண்: சின்னப்பெண் தேடும் மன்னன் யாரோ
கன்னிப்பூ சூடும் கண்ணன் யாரோ
நீலத்தாமரை நீரைத்தேடுது
பூவைப்போலவே பூவை
நானும் வாடும் பருவமிது

பெண்: சின்னப்பூ சின்னப்பூ
கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா
என்னைப்போல் கன்னிப்பூ

பெண்: இளவேனில் காலம் இளமாலை நேரம்
இன்பத்தை அள்ளி இறைக்கும்
சொர்க்கத்தின் அந்தப்புரம் இதுவோ

பெண்: சின்னப்பூ சின்னப்பூ
கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா
என்னைப்போல் கன்னிப்பூ......

A little space to find your voice.

About Chinna Poo Chinna Poo

Chinna Poo Chinna Poo is a song from Japanil Kalyanaraman (1985). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer