Adi Aathi Song Lyrics

Siren·2024

Movie
Siren
Singer
Anthony Daasan and Sinduri Vishal
A continuous glide, at your pace.
Text size

குழு: சின்ன மொட்டு ஒன்னு பூத்து இப்பம்
வெட்கப்படும் ஜோரு
வண்ண பொட்டு வச்சி
பூவு வச்சி நிக்கிறத பாரு

குழு: வாழ மர தோரணமா
வாச நட பாதைங்க
சீர் வரிச ஊர்வலமா
சொந்த பந்தம் சேருங்க

குழு: கூடி வாங்க பொண்ணுகளே
கொலவய போட்டு ஆடுங்க
மாடி வீடு கட்டித்தரும்
மாப்பிள்ள வேணுன்னு கேளுங்க

பெண்: பளபளப்பும் கூடிச்சா
மினுமினுப்பும் ஏறிச்சா
கண்ணாடியில் உன்ன நீயும்
பாக்கிறப்போம் தோனிச்சா

பெண்: பத்திரமா இருந்துக்க
பக்குவமா நடந்துக்க
கண்ட கண்ணும் பட்டா தப்பு
கண்மணியே ஏத்துக்க
கண்ணத்துல பூத்துக்க

பெண்: அடியாத்தி அடியாத்தி
ஆளான பேத்தி
ஆகாசமே கண்ணு வைக்க
பொங்கி நிக்கும் பருத்தி

பெண்: அடியாத்தி அடியாத்தி
ஆளான பேத்தி
ஆகாசமே கண்ணு வைக்க
பொங்கி நிக்கும் பருத்தி

பெண்: ஊராடுற வாய கொஞ்சம்
உள்ள பூட்டி வையி
வாலாட்டுற வேலையெல்லாம்
வேணா தள்ளி வையி

பெண்: காலாடுற கொலுசுக்குத்தான்
பூத்த கத சொல்லு
மேலாடுற சட்ட துணிய
லூசா தைக்க சொல்லு

பெண்: ஆகமொத்தம் நீயும்
இப்போ பொம்பள தான் கேளு
பொத்தி வெச்சு பாத்துக்கம்மா
மோசமான ஊரு

பெண்: இஷ்டத்துக்கு ஊற சுத்த
கூடாதடி ரோசு
சத்தம் போட்டு பேசாதடி
மெள்ளமா நீ பேசு

பெண்: ஏ அடியாத்தி அடியாத்தி
வலையலு குலுங்குற ஓசை
வானத்தை எட்டும் தான்
தாவணி போடுற ஆசை
நாணத்தக் கூட்டும் டா

ஆண்: பூவே உன்ன பாக்குறப்போ
போகுதம்மா நெஞ்சு
தாயும் வந்து பாதித்திட தான்
ஏங்குதம்மா கண்ணு

ஆண்: சாத்திரத்த சொல்லி உன்ன
பூட்டி வைக்கும் ஊரு
ஏத்துக்காத பெண்ணே நீயும்
எதித்து கேள்வி கேளு

ஆண் & குழு: உண்மையிலே பெண்ணிந்தான்
படைக்கிற கடவுள்
ஆணக்கூட பொம்பளதான்
சுமக்கணும் கருவில்

ஆண் & குழு: தீட்டு என்று தள்ளி வைக்கும்
வேலையத்த ஊரு
சாத்திரத்த கொள்ளி வச்சி
உன் வேலைய பாரு

பெண்: பளபளப்பும் கூடிச்சா
மினுமினுப்பும் ஏறிச்சா
கண்ணாடியில் உன்ன நீயும்
பாக்கிறப்போம் தோனிச்சா

பெண்: பத்திரமா இருந்துக்க
பக்குவமா நடந்துக்க
கண்ட கண்ணும் பட்டா தப்பு
கண்மணியே ஏத்துக்க
கண்ணத்துல பூத்துக்க

பெண்: கெண்டை காலு கெளுத்தி
கொண்ட போட்ட கொழுந்தி
உலகத்து பேர் அழகா
உன்ன பெத்த ஒருத்தி

பெண்: அடியாத்தி அடியாத்தி
யே… அடியாத்தி அடியாத்தி

A little space to find your voice.

About Adi Aathi

Adi Aathi is a song from Siren (2024). Performed by Anthony Daasan, Sinduri Vishal. Music by G. V. Prakash Kumar. Lyrics by Murugan Manthiram.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer