Netru Varai Song Lyrics

Siren·2024

Movie
Siren
Singer
Sid Sriram
Lyricist
Thamarai
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நேற்று வரை நேற்று வரை
தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே
உலகின் முதல் காதல் கதை

ஆண்: அனலாகவே வேகும் பனிபோல மோதும்
மழை கால மேகம் கண்டேன்
கரை சேர வேண்டும் கடல் என்று தேயும்
உனை தேடி கண்டு கொண்டேன்

ஆண்: பேசும் போதிலே கேளா ஒலி
பார்வை ஆகுமே தீபாவளி
உன்னை போல யாருமில்லை
என் இறைவி

ஆண்: நேற்று வரை நேற்று வரை
தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே
உலகின் முதல் காதல் கதை

ஆண்: முனகல் .....

ஆண்: மௌனம் என்னும் உன் மொழியில்
மழலையாய் ஆகி பேசுகிறாய்
ஒலிகளினால் நம் உலகில்
கவிதை சாயம் பூசுகிறாய்

ஆண்: கனவா நானவா தெரியா நிலையே
பகலாய் இரவாய் பழகும் கலையே

ஆண்: நேற்று வரை நேற்று வரை
தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே
உலகின் முதல் காதல் கதை

ஆண்: என்னது காற்றில் நீ கரைந்தாய்
என்னது வானம் நீ அளந்தாய்
என்னது வாசல் நீ திறந்தாய்
எனது ஓசை நீ உணர்ந்தாய்

ஆண்: ஒரு நாள் நிழலாய்
தரையில் இருந்தாய்
பிறகு என் மனதில்
நிழலாய் நிறைந்தாய்

ஆண்: நேற்று வரை நேற்று வரை
தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே
உலகின் முதல் காதல் கதை

A little space to find your voice.

About Netru Varai

Netru Varai is a song from Siren (2024). Performed by Sid Sriram. Music by G. V. Prakash Kumar. Lyrics by Thamarai.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer