Perazhagu Meni Song Lyrics

Vatathukkul Chadhuram·1978

A continuous glide, at your pace.
Text size

பெண்: பேரழகு மேனி கொண்டேன்
ஊர் புகழ ஆட வந்தேன்
பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும்
காவலென்ன வேலி என்ன

பெண்: பேரழகு மேனி கொண்டேன்
ஊர் புகழ ஆட வந்தேன்
பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும்
காவலென்ன வேலி என்ன

பெண்: நான் சிரித்த நேரத்திலே
நான் நினைத்த வாழ்க்கையில்லை
நான் வளர்ந்த பாதையிலே
நாலு பக்கம் வேலியில்லை

பெண்: பாசத்துக்கு மனதை வைத்தேன்
வாழ்வதற்கு அழகை வைத்தேன்
உன் உறவின் ஆதரவில்
காலமென்றும் மகிழ்ந்திருப்பேன்

பெண்: பேரழகு மேனி கொண்டேன்
ஊர் புகழ ஆட வந்தேன்
பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும்
காவலென்ன வேலி என்ன

பெண்: வட்டத்துக்குள் சதுரம் ஒன்று
சதுரத்தில் வட்டம் ஒன்று
உள்ளத்துக்குள் உள்ளம் என்று
ஒன்று பட்ட பிணைப்பும் உண்டு

பெண்: கோடி மலர் வாங்கி வந்து
கூந்தல் தனில் சூட்டி வைத்தேன்
வாழ வைத்து பார்ப்பதொன்றே
ஏழை எந்தன் ஆசையம்மா

பெண்: பேரழகு மேனி கொண்டேன்
ஊர் புகழ ஆட வந்தேன்
பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும்
காவலென்ன வேலி என்ன
காவலென்ன வேலி என்ன

A little space to find your voice.

About Perazhagu Meni

Perazhagu Meni is a song from Vatathukkul Chadhuram (1978). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer