Amma Azhage Song Lyrics

Kadhal Oviyam·1982

Kadhal Oviyam movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அம்மா அழகே
உலகின் ஒளியே
அம்மா அழகே
உலகின் ஒளியே
என் சங்கீதம் உன் கீதமே
உனை நான் அழைத்தால்
விழியில் மழையே

ஆண்: அம்மா அழகே
உலகின் ஒளியே

ஆண்: ஆகாயம் என் பாட்டில்
அசைகின்றது
என் சங்கீதம் பொய் என்று
யார் சொன்னது

ஆண்: கனவுகளே வழிவிடுங்கள்
கலைமகளை வரவிடுங்கள்
மலரில் உறங்கும் பூங்காற்று
அதனை எழுப்பும் என் பாட்டு
ஓடும் நிலாவே ஓளி தீபம் ஏற்று

ஆண்: ராகமே உயிராகுமே
அது பெற்றுத் தரும்
முத்துச் சரம்
சொந்தம் தரும் நல்வேதமும்
இன்பம் தரும் பொன்மந்திரம்

ஆண்: முந்தும் தீ என்னை
சுற்றிச் சுடுமே
எந்தன் இசை என்னை
எட்டிச் சுடுமே

ஆண்: இந்த வெப்பம் என்னை
என்ன செய்யும்
சந்தனங்கள் பூசுமோ
உள்ளிருக்கும் ஜோதி ஒன்று உண்டு
அதனை வெப்பம் தீண்டுமோ

ஆண்: படபட படவென
எரிகிற கொழுந்து
இமைகளை உரசுது
இது ஒரு அழகு

ஆண்: வேதம் கெடாது
தீயில் விழாது
யாரும் தொடாத சுருதி
அங்கம் பொடிபட நெஞ்சம் உருகிட
தேவி வருவது உறுதி
தேவி வருவது உறுதி
தேவி வருவது உறுதி

A little space to find your voice.

About Amma Azhage

Amma Azhage is a song from Kadhal Oviyam (1982). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer