Anthapurathil Oru Song Lyrics

Dheepam·1977

Dheepam movie poster
Movie
Dheepam
Singer
T, M. Soundararajan and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அந்தப்புரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்
அந்தப்புரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்

ஆண்: கண்கள் சிவந்திருக்க
அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு
வழி கேட்டாள்

பெண்: சாமந்தி பூக்கள் மலர்ந்தன

ஆண்: இரு சந்தன தேர்கள் அசைந்தன

பெண்: சாமந்தி பூக்கள் மலர்ந்தன

ஆண்: இரு சந்தன தேர்கள் அசைந்தன

பெண்: பாவை இதழ் இரண்டும் கோவை

ஆண்: அமுத ரசம் தேவை

பெண்: என அழைக்கும் பார்வையோ

பெண்: அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
ஆசை கனிந்துவர அவன் பார்த்தான்
அன்னம் தலை குனிந்து
நிலம் பார்த்தாள்

ஆண்: {சங்கு வண்ண கழுத்துக்கு
தங்கமாலை அவள்
சங்கமத்தின் சுகத்துக்கு
அந்திமாலை} (2)

பெண்: குங்குமத்தின் இதழ்
சின்னம் தந்த காலை
அவன் கொள்ளை கொள்ள
துடித்தது என்ன பார்வை

ஆண்: அது பார்வையல்ல
பாஷையென்று கூறடி என்றாள்

பெண்: அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி

ஆண்: கண்கள் சிவந்திருக்க
அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு
வழி கேட்டாள்

ஆண்: முத்துச்சிப்பி திறந்தது
விண்ணை பார்த்து

பெண்: மழை முத்து வந்து
விழுந்தது வண்ணம் பூத்து

ஆண்: முத்துச்சிப்பி திறந்தது
விண்ணை பார்த்து

பெண்: மழை முத்து வந்து
விழுந்தது வண்ணம் பூத்து

ஆண்: பித்தம் ஒன்று வளர்ந்தது
முத்தம் கேட்டு

பெண்: அவன் நெஞ்சில் வந்து
பிறந்திடும் தொட்டில் பாட்டு

ஆண் & பெண்: அங்கே தென் பொதிகை
தென்றல் வந்து ஆடிடும் பாடும்

பெண்: அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி

ஆண்: கண்கள் சிவந்திருக்க
அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு
வழி கேட்டாள்

பெண்: ஆராரிரோ…

ஆண்: ஆராரி…ஆராராரிரோ

பெண்: ஆரிராரோ ஆராரிரோ

ஆண்: ஆராரிரோ...

பெண்: ஆராரிரோ...

ஆண்: ஆராரிரோ....

பெண்: ஆராரிரோ...

A little space to find your voice.

About Anthapurathil Oru

Anthapurathil Oru is a song from Dheepam (1977). Performed by T, M. Soundararajan, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer