Kanneer Thuliye Song Lyrics

Kireedam·2007

Kireedam movie poster
Singer
Vijay Yesudas
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கண்ணீர் துளியே துளியே
உன் கவலைகள் துடைத்திடும்
கைகள் இங்கே
கடல் மேல் மழை நீர் விழுந்தால்
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே

ஆண்: கண்கள் என்று இருந்து விட்டால்
அதில் கண்ணீருக்கும் இடம் இன்றி போவதில்லை
கடவுளுக்கும் கவலை உண்டு
எங்கும் இன்பம் மட்டும் இருகின்ற இதயமில்லை

ஆண்: இந்த பாசம் அது ரொம்ப பொல்லாதது
அதிலே விழுந்தால் நீ எழுந்திட வழி இல்லை

ஆண்: கண்ணீர் துளியே துளியே
உன் கவலைகள் துடைத்திடும்
கைகள் இங்கே
கடல் மேல் மழை நீர் விழுந்தால்
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே

ஆண்: மனதில் ஆயிரம் ஆசைகள் கடக்குமே
நினைத்தது வழியில் இடி வந்து கெடுக்குமே

ஆண்: நதியினில் விழுந்த இலைகளுக்கு
போகும் திசைகள் புரிவதில்லை
கரையில் இருக்கும் ஓடத்துக்கு
கடலின் கவலைகள் தெரிவதில்லை

ஆண்: யாரிடமும் குற்றமில்லை
காலம் செய்த குற்றம் இது தானோ

ஆண்: கண்ணீர் துளியே துளியே
உன் கவலைகள் துடைத்திடும்
கைகள் இங்கே
கடல் மேல் மழை நீர் விழுந்தால்
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே

ஆண்: யார் வந்து இடையில் இன்பத்தை கெடுத்தது
பரவைகள் கூடிலே கிளையை முரித்தது

ஆண்: கனவில் பூக்கும் பூக்களினை
கைகளில் பரித்திட முடிவதில்லை
காதலை மறக்க உலகத்திலே
மருந்துகள் எதுவும் கிடைப்பதில்லை

ஆண்: யாரிடமும் குற்றமில்லை
காலம் செய்த குற்றம் இது தானோ

A little space to find your voice.

About Kanneer Thuliye

Kanneer Thuliye is a song from Kireedam (2007). Performed by Vijay Yesudas. Music by G. V. Prakash Kumar. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer