Vaa Nila Song Lyrics

Naan Aval Adhu·2007

A continuous glide, at your pace.
Text size

பெண்: உன்னை காணவே விழிகள் மூடினேன்
கனவின் வழியால்
உன்னை என் உடன் உளவு பார்ப்பது
நிலவின் தொழிலா

பெண்: இது தானே முதல் நாள்
இளம் காதல் திருநாள்
இது தானே முதல் நாள்
இளம் காதல் திருநாள்

பெண்: வா நிலா இன்று நீ உன் வானத்தை
விட்டு சென்றிடு தூரம்
கண் கொட்டும் மின்னலும் வேண்டாம்
இன்று என்றே சொல்லிடும் நேரம்

பெண்: என் மேனி எங்கும்
மேகம் அலைபாயும்
ஓர் வெட்கம் கொண்டே
வானம் நிறம் மாறும்
வின் மீன்கள் வந்தே
வீட்டில் குடி ஏறும்
என் கூந்தல் பூக்களும்
கேலி செய்யுமே

பெண்: வா நிலா இன்று நீ உன் வானத்தை
விட்டு சென்றிடு தூரம்
கண் கொட்டும் மின்னலும் வேண்டாம்
இன்று என்றே சொல்லிடும் நேரம்

பெண்: புது ஓசையின் உருவம் பேசுதே

பெண்: எதனால் எதனால்

பெண்: பரிகாசமாய் பதுமை பாக்குதே

பெண்: எதனால் எதனால்

பெண்: இதழ் ஓரமாய் குளிரும் வேர்வையே

பெண்: துடித்ததால் என்ன

பெண்: தடையாகிடும் போர்வை கொஞ்சமாய்

பெண்: உடைத்தால் என்ன

பெண்: மெழுகாக கரைந்தேன்
உயிரோடு உறைந்தேன்
நமக்கான இள மாலை
இருள் வேளை வருகிறதே

பெண்: மெதுவாகவே மெழுகு தீபம்
உருகும் உருகும்
இலை போலவே
இரவு நேரமும் உதிரும் உதிரும்
பரிமாறவும் பசிகள் ஆறவும் நேரம் எங்கே
இமை மூடினால் இரவு
போய் விடும் வா வா அன்பே

பெண்: மழை சாரல் விழலாம்
அணை தாண்டி வரலாம்
நகராமல் நனைவோம்
நனைவோம் விடியும் வரை

பெண்: வா நிலா இன்று நீ உன் வானத்தை
விட்டு சென்றிடு தூரம்
கண் கொட்டும் மின்னலும் வேண்டாம்
இன்று என்றே சொல்லிடும் நேரம்

பெண்: என் மேனி எங்கும்
மேகம் அலைபாயும்
ஓர் வெட்கம் கொண்டே
வானம் நிறம் மாறும்
வின் மீன்கள் வந்தே
வீட்டில் குடி ஏறும்
என் கூந்தல் பூக்களும்
கேலி செய்யுமே

A little space to find your voice.

About Vaa Nila

Vaa Nila is a song from Naan Aval Adhu (2007). Performed by Mahathi. Music by G. V. Prakash Kumar. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer