Ithu Ilamai Song Lyrics

Ambigai Neril Vanthaal·1985

Ambigai Neril Vanthaal movie poster
Singer
S. Janaki and Ramesh
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

குழு: லலலல லால லாலலா
லலலல லால லாலலா
லாலலா லாலலா லாலலா லா...

பெண்: இது இளமை இளமை இளமை
தங்கப் பதுமை பதுமை பதுமை
மெல்ல மெல்ல முல்லைச் செண்டு
துள்ளி விழும் உன்னைக் கண்டு
கை இரண்டில் அள்ளிக் கொண்டு
கன்னங்களில் முத்தம் சிந்து
இடமோ தனிமை சுகமோ புதுமை
இடமோ தனிமை சுகமோ புதுமை

பெண்: இது இளமை இளமை இளமை
தங்கப் பதுமை பதுமை பதுமை

குழு: லாலலா... லாலலா...
லாலலால லாலலால லாலலா...

ஆண்: கண்ணில் கண்டதும்
போதையே பெண்ணில் தோன்றுதே
உந்தன் பூ உடல்
ஆசையை நெஞ்சில் தூண்டுதே

பெண்: இன்னும் தாமதம் ஏனோ
என்னை நீ தழுவு
மின்னும் தேனிதழ் மேலே
பாடல் நீ எழுது

ஆண்: தரை மேல் அலையாய்
உன்னை நான் தொடுவேன்
வயல் மேல் மழையாய்
சுகமே பொழிவேன்
அருகில் வருவேன்
என்னை நான் தருவேன்

பெண்: இது போல் திருநாள்
இனி மேல் வருமோ
மனம் போல் இணைவோம்

பெண்: இது இளமை இளமை இளமை
தங்கப் பதுமை பதுமை பதுமை
மெல்ல மெல்ல முல்லைச் செண்டு
துள்ளி விழும் உன்னைக் கண்டு
கை இரண்டில் அள்ளிக் கொண்டு
கன்னங்களில் முத்தம் சிந்து
இடமோ தனிமை சுகமோ புதுமை
இடமோ தனிமை சுகமோ புதுமை

பெண்: இது இளமை இளமை இளமை
தங்கப் பதுமை பதுமை பதுமை

குழு: துதுதுதுதூ... துத்தூ...
துதுதுதுதூ... துத்தூ...
துதுதுதுதூ... துதுதுதுதூ...
துதுதுதுதூ...

பெண்: தத்தித் தாவுது பைங்கிளி
மெத்தை நீ விரி
பொங்கிப் பாயுது
காவிரி இங்கே நீ குளி

ஆண்: மின்னும் தாமரைப் பூவே
உன்னை நான் பறிப்பேன்
கன்னப் பூ நிலம் மேலே
அன்பை நான் விதைப்பேன்

பெண்: மலை மேல் முகிலாய்
சிலை மேல் துகிலாய்
இலை மேல் கனியாய்
மலர் மேல் பனியாய்
மடி மேல் விழலாம்
எனை நீ தொடலாம்

ஆண்: அழைக்கும் கிளியே
இனிக்கும் கனியே
அமுதம் தருவாய்

ஆண்: இது இளமை இளமை இளமை
தங்கப் பதுமை பதுமை பதுமை

பெண்: மெல்ல மெல்ல முல்லைச் செண்டு
துள்ளி விழும் உன்னைக் கண்டு

ஆண்: கை இரண்டில் அள்ளிக் கொண்டு
கன்னங்களில் முத்தம் சிந்து
இடமோ தனிமை சுகமோ புதுமை
இடமோ தனிமை சுகமோ புதுமை

பெண்: இது இளமை இளமை இளமை
தங்கப் பதுமை பதுமை பதுமை

A little space to find your voice.

About Ithu Ilamai

Ithu Ilamai is a song from Ambigai Neril Vanthaal (1985). Performed by S. Janaki, Ramesh. Music by Ilaiyaraaja. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer