Aavaram Poovai Thottu Song Lyrics

Manamagale Vaa·1988

Manamagale Vaa movie poster
Singer
P. Susheela
A continuous glide, at your pace.
Text size

பெண்: ....................................

பெண்: ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே
அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே
தீண்டாதே என்னை மெல்லத்தானே
இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே
தீண்டாதே என்னை மெல்லத்தானே
இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே

பெண்: அச்சாரம் அள்ளிக்கொண்டு யார்தான் வந்தாலும்
அச்சாரம் அள்ளிக்கொண்டு யார்தான் வந்தாலும்
அழகான பெண்ணைக்கண்டு ஆசைப்பட்டாலும்
ஆகாது எந்தன் முன்னே சேராது செல்லக் கண்ணே
மண் பார்த்து வாழும் பெண்ணே
மானத்தைக் காக்கும் கண்ணே

பெண்: இளமைக்கோ வீடும் உண்டு இன்பத்தின் மோகம் உண்டு
ஆனாலும் பெண்மை என்றால் அங்கேதான் நாணம் உண்டு
மோகத்தை தீண்டும் பனிக்காற்றே என்னைத் தீண்டாதே
ஜோடியைத் தேடும் புள்ளி மானே என்னைப் பார்க்காதே

பெண்: ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே
அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே
தீண்டாதே என்னை மெல்லத்தானே
இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே

பெண்: ஆத்தோரம் நின்று இங்கே ஆடிடும் பூமரம்
அழகென்னைக் கண்டு கண்டு வீசிடும் சாமரம்
என் பெயரைச் சொன்னாலே சிறு மொட்டும் பூக்காதோ
மந்தாரச் செடியெல்லாம் பூ அள்ளிக் கொட்டாதோ

பெண்: வானத்துப் பூக்கள் எல்லாம் வாயார வாழ்த்துச் சொல்லும்
மேகத்தில் ஊஞ்சல் கட்டி அதில் என்னை ஆடச் சொல்லும்
மோகத்தை தீண்டும் பனிக்காற்றே என்னைத் தீண்டாதே
ஜோடியைத் தேடும் புள்ளி மானே என்னைப் பார்க்காதே

பெண்: ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே
அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே
தீண்டாதே என்னை மெல்லத்தானே
இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே
தாங்காது எந்தன் உள்ளம் மானே ம்ம்ம்.....ம்ம்....ம்ம்...

A little space to find your voice.

About Aavaram Poovai Thottu

Aavaram Poovai Thottu is a song from Manamagale Vaa (1988). Performed by P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer