Vaazhve Mayama Song Lyrics

Gaayathri·1977

Gaayathri movie poster
Singer
P. Susheela
A continuous glide, at your pace.
Text size

பெண்: வாழ்வே மாயமா
வாழ்வே மாயமா
வெறும் கதையா
கடும் புயலா
வெறும் கனவா நிஜமா

பெண்: வாழ்வே மாயமா
வெறும் கதையா
கடும் புயலா
வெறும் கனவா நிஜமா
நடந்தவை எல்லாம் வேஷங்களா
நடப்பவை எல்லாம் மோசங்களா

பெண்: வாழ்வே மாயமா
வெறும் கதையா
கடும் புயலா
வெறும் கனவா நிஜமா

பெண்: நிலவுக்கு பின்னால்
நிழல் இருக்கும்
நிழலுக்கும் ஒருநாள்
ஒளி கிடைக்கும்
நிலவுக்கு பின்னால்
நிழல் இருக்கும்
நிழலுக்கும் ஒருநாள்
ஒளி கிடைக்கும்

பெண்: மலரில் நாகம்
மறைந்திருக்கும்
மனதுக்குள் மிருகம்
ஒளிந்திருக்கும்
திரைப்போட்டு நீ.....
மறைத்தால் என்ன
தெரியாமல் போகுமா....

பெண்: வாழ்வே மாயமா
வெறும் கதையா
கடும் புயலா
வெறும் கனவா நிஜமா

பெண்: சிரிப்பது போலே
முகம் இருக்கும்
சிரிப்புக்கு பின்னால்
நெருப்பிருக்கும்
சிரிப்பது போலே
முகம் இருக்கும்
சிரிப்புக்கு பின்னால்
நெருப்பிருக்கும்

பெண்: அணைப்பதுபோலே
கரம் இருக்கும்
அங்கே கொடுவாள்
மறைந்திருக்கும்
திரைப்போட்டு நீ....
மறைத்தால் என்ன
தெரியாமல் போகுமா....

பெண்: வாழ்வே மாயமா
வெறும் கதையா
கடும் புயலா
வெறும் கனவா நிஜமா

பெண்: வாழ்வே மாயமா
வெறும் கதையா
கடும் புயலா
வெறும் கனவா நிஜமா
வெறும் கனவா நிஜமா

A little space to find your voice.

About Vaazhve Mayama

Vaazhve Mayama is a song from Gaayathri (1977). Performed by P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer