Thiruda Thiruda Thiruda Song Lyrics

Enakku Naane Needhipathi·1986

Enakku Naane Needhipathi movie poster
Singer
K. S. Chitra
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

பெண்: திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா
திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா

பெண்: இந்த மனதை எடுத்துக் கெடுத்தது போதாதா
என் மனதை திருப்பிக் கொடுக்கக் கூடாதா
இந்த மனதை எடுத்துக் கெடுத்தது போதாதா
என் மனதை திருப்பிக் கொடுக்கக் கூடாதா

பெண்: திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா
திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா

பெண்: கையில் வளை யாவும் நீக்க வந்தாய்
கண்ணால் கணை நூறு நீ தொடுத்தாய்
உன்னால் பெண் பாவை நான் மெலிந்தேன்
உறக்கம் இல்லாமல் கண் சிவந்தேன்

பெண்: பருவம் நாள் தோறும் படுத்தும் பாடு
புரிந்தும் புரியாமல் இருந்தாயே
நோயாகவே இடை வாடவே
இரவோடு நான் போராடவே
என் அன்பை களவாடி எங்கே வைத்தாய்

பெண்: ஹேய் திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா
திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா

பெண்: ஒரு நாள் விழி வாசல் நான் திறந்தேன்
உடனே என் நெஞ்சில் நீ மலர்ந்தாய்
ஆசை ராகங்கள் நீ படித்தாய்
காதல் நீராட நீ அழைத்தாய்

பெண்: நாணம் பறந்தோட நானும் நின்றேன்
நாளும் புது மோகம் கொடுத்தாயே
உன் தோளிலே நான் ஆடவே
உன் மார்பிலே கண் மூடவே
கல்யாணப் பூ மாலை நீ சூடலாம்

பெண்: ஹேய் திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா
திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா

பெண்: இந்த மனதை எடுத்துக் கெடுத்தது போதாதா
என் மனதை திருப்பிக் கொடுக்கக் கூடாதா

பெண்: திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா
திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா

A little space to find your voice.

About Thiruda Thiruda Thiruda

Thiruda Thiruda Thiruda is a song from Enakku Naane Needhipathi (1986). Performed by K. S. Chitra. Music by Ilaiyaraaja. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer