Vizhiye Vizhiye Kaditham Song Lyrics

Vazhkkai Chakkaram·1990

Singer
S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய்மொழி
விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய்மொழி

ஆண்: காதலின் கலைவிழா காமனின் திருவிழா
செம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில்
கம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில்

பெண்: விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய் மொழி
காதலின் கலைவிழா காமனின் திருவிழா
செம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில்
கம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில்...

பெண்: கண்ணில் என்ன மின்னல் இது கார்காலமா

ஆண்: துள்ளிச் செல்லும் தென்றல் மண ஊர்கோலமா

பெண்: தென்றல் ஆணின் ஜாதி அது எந்தன் தோளை நீவி
உடைகள் விலகும் இடையை தழுவும்
அனுபவம் நான் பார்க்கிறேன்

ஆண்: காற்றின் மீது ஏறி ஒரு காதல் ராகம் பாடி
விண்ணில் நீந்தி செல்வோம்
அதன் எல்லைக் கண்டு சொல்வோம்

பெண்: விலகாமல் பிரியாமல்
ஆனந்த ராஜாங்கம் நாம் ஆளலாம்

இருவர்: விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய் மொழி

பெண்: காதலின் கலைவிழா காமனின் திருவிழா

ஆண்: செம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில்
கம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில்

இருவர்: விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய் மொழி

ஆண்: சிற்பம் ஒன்று வந்து இளம் பெண்ணானது

பெண்: உந்தன் கைகள் தொட்டு அது பொன்னானது

ஆண்: அல்லிப் பூவில் கன்னம் கிள்ளிப் பார்க்க எண்ணும்
அமுதசுரபி வழிய வழிய பருகிடும் நாள் வந்தது

பெண்: தொட்டு பார்க்கும் கைகள்
எனை சுட்டு பார்க்கும் கண்கள்

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம்

பெண்: அள்ளப் பார்க்கும் நெஞ்சம்
அது அன்னம் தேடும் மஞ்சம்

ஆண்: சுகராகம் அரங்கேறும்
ஜாமத்தில் காமத்தின் ஆராதனை

இருவர்: விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய் மொழி

ஆண்: காதலின் கலைவிழா காமனின் திருவிழா

பெண்: செம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில்
கம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில்

ஆண்: விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய் மொழி

பெண்: விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய்மொழி

A little space to find your voice.

About Vizhiye Vizhiye Kaditham

Vizhiye Vizhiye Kaditham is a song from Vazhkkai Chakkaram (1990). Performed by K. S. Chithra, S.P. Balasubrahmanyam. Music by Sankar Ganesh. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer