Andhi Mazhai Megam Song Lyrics

Nayagan·1987

Movie
Nayagan
Singer
T. L. Maharajan, P. Susheela and Chorus
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அந்தி மழை மேகம்
தங்க மழை தூவும் திரு நாளாம்
எங்களுக்கும் காலம்
வந்ததென பாடும் பெருநாளாம்

பெண்: ஹோய் இடி கொட்டு மேளம்
அது கொட்டும் நேரம்
எங்கள் தெரு எங்கும் தேரோடும்

குழு: தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்

பெண்: அந்தி மழை மேகம்
தங்க மழை தூவும் திரு நாளாம்
எங்களுக்கும் காலம்
வந்ததென பாடும் பெருநாளாம்

பெண்: நீர் நடக்கும் பாதை
எங்கும் நஞ்சையானது

குழு: தனக்க தீம்

ஆண்: நாம் நடக்கும் பாதை எங்கும்
பஞ்சம் போனது

குழு: தனக்க தீம்

பெண்: மாடங்கள் கலைகூடங்கள்
யார் செய்தார் அதை நாம் செய்தோம்

ஆண்: நாடாளும் ஒரு ராஜாங்கம்
யார் தந்தார் அதை நாம் தந்தோம்

பெண்: தேசம் என்னும் சோலையில்
வேர்கள் நாங்களே

ஆண்: தியாகம் என்னும் ஜோதியில்
தீபம் நாங்களே

குழு: தாம்தனத்தோம் தீம்தனத்தோம்
ராகம் பாடுவோம்

பெண்: அந்தி மழை மேகம்
தங்க மழை தூவும் திரு நாளாம்
எங்களுக்கும் காலம்
வந்ததென பாடும் பெருநாளாம்

ஆண்: ஹேய் இடி கொட்டு மேளம்
அது கொட்டும் நேரம்
எங்கள் தெரு எங்கும் தேரோடும்

குழு: தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்

குழு: ஹோ..ஓஓ..ஓஒ..ஓஹோ...
ஹோ..ஓஓ..ஓஒ..ஓஹோ...

ஆண்: பால் குடங்கள் தேன்குடங்கள்
நூறு வந்தது

குழு: தனக்க தீம்

பெண்: கை வணங்கும் தெய்வம் ஒன்று
நேரில் வந்தது

குழு: தனக்க தீம்

ஆண்: பூவாரம் இனி சூட்டுங்கள்
கற்பூரம் இனி ஏற்றுங்கள்

பெண்: ஊரெல்லாம் களி ஆட்டங்கள்
என்னென்ன இனி காட்டுங்கள்

ஆண்: வீடுதோரம் மங்களம்
இன்று வந்தது

பெண்: காணும் போது நெஞ்சினில்
இன்பம் வந்தது

குழு: தாம்தனத்தோம் தீம்தனத்தோம்
ராகம் பாடுவோம்

ஆண்: அந்தி மழை மேகம்
தங்க மழை தூவும் திரு நாளாம்

பெண்: எங்களுக்கும் காலம்
வந்ததென பாடும் பெருநாளாம்

ஆண்: ஹேய் இடி கொட்டு மேளம்

பெண்: அது கொட்டும் நேரம்

ஆண் & பெண்: எங்கள் தெரு எங்கும் தேரோடும்

குழு: தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்

குழு: அந்தி மழை மேகம்
தங்க மழை தூவும் திரு நாளாம்
எங்களுக்கும் காலம்
வந்ததென பாடும் பெருநாளாம்
Share this song

A little space to find your voice.

About Andhi Mazhai Megam

Andhi Mazhai Megam is a song from Nayagan (1987). Performed by T. L. Maharajan, P. Susheela, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer