Maamaa Maalai Song Lyrics

Ambigai Neril Vanthaal·1985

Ambigai Neril Vanthaal movie poster
Singer
S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்
லலலல மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்
தழுவும் போது அமுதம் ஊறும்
அழகு கோடி பொன்னாகும்
தழுவும் போது அமுதம் ஊறும்
அழகு கோடி பொன்னாகும்

பெண்: லலலல மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்

பெண்: மனதை இழுக்கும் பார்வை போட்டு
மடியில் இருந்து வாழ்ந்திடு
மறு நாள் விடியும் பொழுதைப் பார்த்து
மயக்கம் தெளிந்து எழுந்திடு
இளமை என்னும் வீணை மீட்டு
இதமாய் என்னை நீ தொடு
இடையில் ஏதும் தடைகள் என்றால்
இரண்டோ மூன்றோ நீ கொடு
என்னோடுதான் என்றென்றுமே நீராடிடு
இன்பங்களின் சொந்தங்களை
நீ அள்ளப் போராடிடு

பெண்: லலலல மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்

பெண்: உலகை மறந்து உறவை மறந்து
மனது திறந்து பாடிடு
உனக்கும் எனக்கும் கிடைக்கும் சுகத்தை
உணரும் வரைக்கும் ஆடிடு

பெண்: பசியை தீர்க்கும் உணவை உண்டு
மேலும் மேலும் பசித்திரு
பருவம் என்னும் மேடை வந்த
பாவை என்னை ரசித்திரு

பெண்: கண் மூடினால் வேறென்னதான்
நீ பார்ப்பது
காதல் சுகம் ஆசைகளை
நீ கண்டு வாழ்ந்திடு

பெண்: லலலல மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்
தழுவும் போது அமுதம் ஊறும்
அழகு கோடி பொன்னாகும்
லலலல மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்

A little space to find your voice.

About Maamaa Maalai

Maamaa Maalai is a song from Ambigai Neril Vanthaal (1985). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by M.G. Vallaban.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer