Pesaama Pesum Kannu Song Lyrics

Kalvan·2023

Kalvan movie poster
Movie
Kalvan
Singer
Kalyani Nair
Lyricist
Snehan
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ..ஹ்ம்ம் ம்ம் ம்ம்

பெண்: பேசாம பேசும் கண்ணு
என் கண்ண திங்குதின்னு
உங்கிட்ட சொல்லதானே
வாரேன் பின்னால

பெண்: நாதாங்கி போட்டுகிட்டு
நா நின்னேன் வெட்கப்பட்டு
சட்டுன்னு ஒடஞ்சி போனேன்
நானே உன்னால

பெண்: களவாணி பயலோனு
தவறாகா நெனச்சவ நான் தான்
இரவெல்லாம் உன கண்டு
உறங்காம தவிச்சவ நான் தான்

பெண்: உன் நெனப்பு தான் மடி நெறைய
நா சொமக்குறேன் ஏனோ தெரியல
உன் மொகத்த தான் மனசுக்குள்ள
படமா நா வரஞ்ச

பெண்: பூ பூக்குற செடி போல
நா சிரிக்கிறேன் பாக்கும் பொழுதுல
நீ நடக்குற பாதையெல்லாம்
நிழலா அலைவேனே

பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ..ஹ்ம்ம் ம்ம் ம்ம்

பெண்: தறியில் போட்ட நூலாட்டம்
ஆடுறேன் நானும் கரகாட்டம்
சரியா தவறா தெரியவில்ல
பாப்போம் வெள்ளோட்டம்

பெண்: மரத்த பாத்த குரங்காட்டம்
உன்ன பாத்தா மன ஓட்டம்
தத்தி தாவி சுத்தி வருதே
என்ன ஆர்பாட்டம்

பெண்: உன்னால நோயாளி
ஆனேனே நான் தான்
நோய் தீர்க்கும் மருந்தாக
வருவாயா நீதானே

பெண்: என் தனிமையும் அழகா
அரங்கேறுதே உன்னால் தானே
உன் பார்வ படவேணும்னு
பதறி போறேனே

பெண்: உன் கிறுக்கேன் என் தலைக்கேற
நா வரிக்குதிர போல ஆனே
என் நெலவரம் கலவரமாக
மாறி போகுதிங்கே

பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ..ஹ்ம்ம் ம்ம் ம்ம்

A little space to find your voice.

About Pesaama Pesum Kannu

Pesaama Pesum Kannu is a song from Kalvan (2023). Performed by Kalyani Nair. Music by G. V. Prakash Kumar. Lyrics by Snehan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer