Mangala Kungumam Song Lyrics

Aval Mella Sirithal·1988

Aval Mella Sirithal movie poster
Singer
P. Jayachandran and S. P. Shailaja
A continuous glide, at your pace.
Text size

குழு: ..........................

பெண்: மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி

ஆண்: மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி

பெண்: காதல் கல்யாணம்

ஆண்: காமன் ஊர்கோலம்

இருவர்: இனி ஏந்நாளும் சந்தோஷம்தான்

ஆண்: மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி

பெண்: மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி

குழு: ...............................

பெண்: வாழையும் தோரணமும்
மணமாலையும் மங்கலமும்
அது கண்டது சங்கமமே
ஒரு காவியம் ஆரம்பமே

ஆண்: காலையில் மணவறைதான்
வரும் மாலையில் தனியறைதான்
அந்த ஆனந்தம் பல முறைதான்
அதன் ஆரம்பம் உன்னிடம்தான்

பெண்: பாதையை மாறிய கால்கள் இது
பாவலன் உன் வழி தேடியது
காதலன் உன் இரு கால்களிலே
கண்களும் பூவினைத் தூவியது

ஆண்: நானும் உனக்காக
உயிரோடு இன்னும் வாழ்கிறேன்

பெண்: மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி

ஆண்: மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி

குழு: ............................

ஆண்: கண் வழி வந்தவளே
என் நெஞ்சினில் நின்றவளே
இளம் பெண்ணெனும் பேரழகே
இனி உன் மனம் என்னுலகே

பெண்: உன் உடல் கோவிலிலே
நான் என் உயிர் வாழ்ந்திருப்பேன்
உன் உறவினைக் காண்பதற்கே
நான் மறுபடி பிறந்திருப்பேன்

ஆண்: எத்தனை ஜென்மும் சேர்ந்திருப்போம்
அத்தனை இன்பமும் பார்த்திருப்போம்
சத்திய சோதனை தீர்ந்ததடி
சங்கமம் ஆனது நதிகளடி

பெண்: பாலும் தெளித் தேனும்
பரிமாறும் இந்த நாயகி

ஆண்: மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி

பெண்: மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி

ஆண்: காதல் கல்யாணம்

பெண்: காமன் ஊர்கோலம்

இருவர்: இனி எந்நாளும் சந்தோஷம்தான்

பெண்: மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி

ஆண்: மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி

A little space to find your voice.

About Mangala Kungumam

Mangala Kungumam is a song from Aval Mella Sirithal (1988). Performed by P. Jayachandran, S. P. Shailaja. Music by Gangai Amaran. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer