Anname Sorname Song Lyrics

Tharaiyil Pootha Malar·1980

Singer
Malaysia Vasudevan and Poorani
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அன்னமே சொர்ணமே வைரமே
இங்கு வந்து என் பாட்டக் கேட்டுக்கடி
அன்னமே சொர்ணமே வைரமே
இங்கு வந்து என் பாட்டக் கேட்டுக்கடி

ஆண்: அடியே நான் சின்னப்பா மாதிரி
நீ அந்த கண்ணாம்பா மாதிரி
அடியே நான் சின்னப்பா மாதிரி
நீ அந்த கண்ணாம்பா மாதிரி
எம்.கே.டி. பாகவதர் பாடாத
தெம்மாங்கு சங்கதியை பாடுறேன் ஆடவாடி

ஆண்: அன்னமே சொர்ணமே வைரமே
இங்கு வந்து என் பாட்டக் கேட்டுக்கடி

ஆண்: கரையேறியே பாயுது கெண்ட
அலை போலவே ஆடட்டும் கொண்ட
கரையேறியே பாயுது கெண்ட
அலை போலவே ஆடட்டும் கொண்ட

ஆண்: உன் காலுல குலுங்குது தண்ட
இங்கு காயுது பாடுற தொண்ட
உன் காலுல குலுங்குது தண்ட
இங்கு காயுது பாடுற தொண்ட

ஆண்: தண்ணிக் கொடங் கொண்டு வந்த புள்ளே
நான் தாகம் கொண்டேன்டி சின்னப் புள்ளே
தண்ணிக் கொடங் கொண்டு வந்த புள்ளே
நான் தாகம் கொண்டேன்டி சின்னப் புள்ளே

ஆண்: நீ ஆடு புள்ளே...ஏ....ஏ....ஏ....ஏ.....ஏ......
நீ ஆடு புள்ளே...
என் கண்ணாட்டி மயிலாட்டம்
கஸ்தூரி மானாட்டம் தாளத்தோட நீயாடடி

ஆண்: அன்னமே சொர்ணமே வைரமே
இங்கு வந்து என் பாட்டக் கேட்டுக்கடி

பெண்: ...............................

ஆண்: நீ ஆவணி மாதத்து மேகம்
உன் தாவணி தூண்டுது மோகம்
இன்னும் ஆட்டத்தில் காட்டடி வேகம்
கண்ணு ஏனடி வேர்க்குது தேகம்
இன்னும் ஆட்டத்தில் காட்டடி வேகம்
கண்ணு ஏனடி வேர்க்குது தேகம்

ஆண்: வண்டு மொய்க்காத கனகாம்பரம்
நீ யாரும் கொய்யாத கொய்யாப்பழம்
வண்டு மொய்க்காத கனகாம்பரம்
நீ யாரும் கொய்யாத கொய்யாப்பழம்
அடி வெள்ளையம்மா........ஆ...ஆ....ஆஆ..
அடி வெள்ளையம்மா........
நான் உன்னாச மதுர வீரன்
உண்மையிலே மதுரக்காரன் செல்லக்குட்டி நீயாடடி

ஆண்: அன்னமே சொர்ணமே வைரமே
இங்கு வந்து என் பாட்டக் கேட்டுக்கடி
அடி என் பாட்டக் கேட்டுக்கடி

ஆண்: ................................

A little space to find your voice.

About Anname Sorname

Anname Sorname is a song from Tharaiyil Pootha Malar (1980). Performed by Malaysia Vasudevan, Poorani. Music by Gangai Amaran. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer