Kalaiyum Megangale Kadhal Song Lyrics

Porutham·1985

Singer
S. Janaki
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: கலையும் மேகங்களே.....
காதல் ஆசைகளே.....

பெண்: கலையும் மேகங்களே
காதல் ஆசைகளே
இளமை என்னை சுடும்
ஏக்கம் கண்ணீர் விடும்
பாலையில் ஏதடி
கண்ணனின் பிருந்தாவனம்
பாலையில் ஏதடி
கண்ணனின் பிருந்தாவனம்

பெண்: கலையும் மேகங்களே
காதல் ஆசைகளே......

பெண்: உன்னை நான் பார்த்தேன்
என்னை நீ பார்த்தாய்
நான் பார்த்ததும் நீ பார்த்ததும்
வெவ்வேறு கோணம்

பெண்: நிழலை நான் பார்த்தேன்
அதுதான் ஏமாந்தேன்
உன் மீதிலே என் நெஞ்சிலே
எனக்கென்ன கோபம்
பொய் மானைத் தேடினேன்
மெய் சோர்ந்து போகிறேன்

பெண்: கலையும் மேகங்களே
காதல் ஆசைகளே......
இளமை என்னை சுடும்
ஏக்கம் கண்ணீர் விடும்
பாலையில் ஏதடி
கண்ணனின் பிருந்தாவனம்

ஆண்: ...................................

பெண்: பாலும் கள்ளென்று
எண்ணும் நினைவொன்று
என் நெஞ்சிலே நான் கொண்டது
தவறென்று கண்டேன்

பெண்: கானல் தண்ணீரும்
கங்கை தண்ணீரும்
ஒன்றல்லவே என்றெண்ணவும்
அறியாது நின்றேன்
எல்லோரும் கண்ணனா
நீ கொஞ்சம் வேறுதான்

பெண்: கலையும் மேகங்களே
காதல் ஆசைகளே......
இளமை என்னை சுடும்
ஏக்கம் கண்ணீர் விடும்
பாலையில் ஏதடி
கண்ணனின் பிருந்தாவனம்
பாலையில் ஏதடி
கண்ணனின் பிருந்தாவனம்

பெண்: கலையும் மேகங்களே
காதல் ஆசைகளே......

A little space to find your voice.

About Kalaiyum Megangale Kadhal

Kalaiyum Megangale Kadhal is a song from Porutham (1985). Performed by S. Janaki. Music by Gangai Amaran. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer