Thalaivane Un Mugam Song Lyrics

Porutham·1985

Singer
S. Janaki
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: மனம் கவர்ந்த மன்னவனே
மலரெழுதும் கடிதம் இது
உன்னைப் பார்த்து ஒரு பேதை மகள்
பரிதவிக்கும் சேதி இது

பெண்: இதயத்தில் உன்னை மட்டும்
ஒளித்து வைத்தேன்
இன்று இதயத்தை காகிதத்தில்
இறக்கி வைத்தேன்

பெண்: தலைவனே உன் முகம் பார்த்தேன்
தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்
தலைவனே உன் முகம் பார்த்தேன்
தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்

பெண்: பார்வையில் காமன் நீ
ஆண்மையில் ராமன் நீ
அழகனே....ஏ....ஏ.....

பெண்: தலைவனே உன் முகம் பார்த்தேன்
தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்

பெண்: பொன்னான தேகமே
செந்தூரம் ஆகுமே
உன் தோள்கள் பார்க்கவே
ஆண்டொன்று வேண்டுமே

பெண்: அரும்புதான் மீசையோ
அதற்குதான் ஆசையோ
கன்னிப் பெண்ணுக்கு மாலை வருமா
எண்ணி தவித்தேன் ஓலை வருமா.....

பெண்: நான் உன்னை பார்க்கவே
நாள்தோறும் ஏங்கினேன்
நீ போகும் பாதையில்
பூவாக தூங்கினேன்

பெண்: தலைவனை நினைந்ததால்
தலையணை நனைந்ததே
பதில் வருமா காத்துக் கிடப்பேன்
வாசல்படியில் பூத்துக் கிடப்பேன்....

பெண்: தலைவனே உன் முகம் பார்த்தேன்
தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்

பெண்: பார்வையில் காமன் நீ
ஆண்மையில் ராமன் நீ
அழகனே....ஏ....ஏ.....

பெண்: தலைவனே உன் முகம் பார்த்தேன்
தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்

A little space to find your voice.

About Thalaivane Un Mugam

Thalaivane Un Mugam is a song from Porutham (1985). Performed by S. Janaki. Music by Gangai Amaran. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer