Thegam Engum Moga Vellam Song Lyrics

Aval Mella Sirithal·1988

Aval Mella Sirithal movie poster
Singer
Mano and K. S. Chithra
A continuous glide, at your pace.
Text size

பெண்: தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித் தேடி என்னைக் கூடி பாடுதே

ஆண்: தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித் தேடி என்னைக் கூடி பாடுதே

பெண்: இளமையில் தனிமையில்
இதழ் தரும் இனிமையில்
எனது மனம் புதுக்கவிதை படிக்குது

ஆண்: தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே

பெண்: தேடித் தேடி என்னைக்கூடி பாடுதே

ஆண்: ஆடி மாதம் ஆசையோடு
பொங்கும் காவேரி
பாடும் போதும் கூடும் போதும்
வாடும் பொன்மேனி

பெண்: பகலிலும் வரும் இரவிலும்
நீ படிக்கும் காதல் காவியம்
பருவமும் நல்ல உருவமும்
ஒன்று கலந்து வந்த ஓவியம்

ஆண்: இடைவிடாத நாடகம்
அதை நடித்துப் பார்த்திட ஆசை
திருவிழா வரும் வேளையில்
இங்கு தினமும் காதலின் பூஜை

பெண்: இரவில் கேட்குது உறவின் ஓசை
இனிய மார்கழி வேளை

ஆண்: தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே

பெண்: தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே

பெண்: வீணை என்னும் மேனியெங்கும்
விரல்கள் விளையாட
மானைப் போன்ற பெண்ணின் நெஞ்சில்
நாணம் அணைப் போட

ஆண்: உடலிலே புதுக் கவிதைகள்
நான் எழுதும் வேளை இரவுதான்
கடலிலே வரும் அலைகள் போல்
நாம் கலந்து கூடும் உறவுதான்

பெண்: மடியிலே தலை சாய்க்கவும்
இமை மூடவும் மனம் கேட்கும்
இடையிலே உந்தன் விழியிலே
பல கோடி ஆசைகள் தாக்கும்

ஆண்: மதனும் ரதியும் கூடும் நேரம்
மேகம் நீர்த்துளி வார்க்கும்

பெண்: தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித் தேடி என்னைக் கூடி பாடுதே

ஆண்: இளமையில் தனிமையில்
இதழ் தரும் இனிமையில்
எனது மனம் புதுக்கவிதை படிக்குது

பெண்: தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே

ஆண்: தேடித் தேடி என்னைக் கூடி பாடுதே

A little space to find your voice.

About Thegam Engum Moga Vellam

Thegam Engum Moga Vellam is a song from Aval Mella Sirithal (1988). Performed by Mano, K. S. Chithra. Music by Gangai Amaran. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer