Kaalai Nera Kaatre Song Lyrics

Bhagavathipuram Railway Gate·1983

Bhagavathipuram Railway Gate movie poster
Singer
S. P. Sailaja and Deepan Chakravarthy
A continuous glide, at your pace.
Text size

பெண்: காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்

பெண்: காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு

ஆண்: நடந்தால் காவேரி நீ நகைத்தால் ஸ்ரீதேவி தான்

பெண்: மொழியே தேவாரமோ விழிமேல் பாமாலையோ

ஆண்: கனவாய் நீ ஆனால் இமையால் நான் பூட்டுவேன்

பெண்: மனமே நீ ஆனா மணித்தேர் நான் ஓட்டுவேன்

ஆண்: கன்னித்தேரில் சாமரம் வீசும்
பின்னல் மீதும் பூவின வாசம்

பெண்: பொதிகை தமிழில் கவிதை பொழியும்
பாரதி தோழனோ

ஆண்: காலை நேரக் காற்றே

பெண்: வாழ்த்திச் செல்லு.....

ஆண்: மாலை சூடும் நாளை

பெண்: பார்த்துச் சொல்லு
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்

ஆண்: காலை நேரக் காற்றே

பெண்: வாழ்த்திச் செல்லு.....

ஆண்: மாலை சூடும் நாளை

பெண்: பார்த்துச் சொல்லு

பெண்: மடித்தேர் ராஜாங்கமே கிடைத்தால் மாமாங்கமே

ஆண்: மலைத்தேன் மேலோங்கவே
இளைத்தேன் நான் ஏங்கியே

பெண்: கனிவாய் தேனாற்றில் ஒரு நாள் நீராட்டுவாய்

ஆண்: இதழாம் தீரத்தில் மறுநாள் பாராட்டுவேன்

பெண்: அந்தி வானில் குங்கும சேலை
தந்த மேக சங்கம மாலை

ஆண்: நயன மலரின் சயன அறையில்
நாயன ஓசையோ

பெண்: காலை நேரக் காற்றே

ஆண்: வாழ்த்திச் செல்லு.....

பெண்: மாலை சூடும் நாளை

ஆண்: பார்த்துச் சொல்லு
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்

பெண்: காலை நேரக் காற்றே

ஆண்: வாழ்த்திச் செல்லு.....

பெண்: மாலை சூடும் நாளை

ஆண்: பார்த்துச் சொல்லு

A little space to find your voice.

About Kaalai Nera Kaatre

Kaalai Nera Kaatre is a song from Bhagavathipuram Railway Gate (1983). Performed by S. P. Sailaja, Deepan Chakravarthy. Music by Ilaiyaraaja. Lyrics by M.G. Vallaban.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer