Sonnalum Nallaa illa Song Lyrics

En Selvame·1985

En Selvame movie poster
Singer
Malaysia Vasudevan and S. P. Sailaja
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா

ஆண்: சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா
கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன
இன்ப தாலாட்ட அன்பு பாராட்ட
ஒரு தாயாக வேண்டும் நீதானே

ஆண்: சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா
கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன

பெண்: நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான்
கொண்டாடும் பிள்ளைக்கு ஆசை உண்டு
கொஞ்சம் நாள் சென்று பின்பு தாயாக
நானாசை கொண்டேன் ஏன் கோபம்....

பெண்: நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான்
கொண்டாடும் பிள்ளைக்கு ஆசை உண்டு

ஆண்: காலத்திலே செய்தால் நல்ல பயிர் வளரும் என்பார்
கண்மணியை பெற்று கொடு தாயே.....
காலத்திலே செய்தால் நல்ல பயிர் வளரும் என்பார்
கண்மணியை பெற்று கொடு தாயே.....

ஆண்: பின்பு ஒன்றிரண்டு போதும்
அதில் எனக்கு மனம் உண்டு
ஆரம்பத்தில் கருவை நீ அழிப்பதென்ன உரிமை
முதலில் பெறுவோம் பிறகு போதும் என்போம்

ஆண்: சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா
கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன

பெண்: பருவத்திலே பெற்ற பிள்ளை அறிஞன் ஆவதில்லை
மருத்துவத்தில் நான் அறிந்த பாடம்
பருவத்திலே பெற்ற பிள்ளை அறிஞன் ஆவதில்லை
மருத்துவத்தில் நான் அறிந்த பாடம்

பெண்: கொஞ்சம் அனுபவங்கள் சேர்ந்து
நல்ல முதிர்ந்த பின்பு பெற்றால்
பேரறிஞன் பிறப்பான் என நானிருந்தேன் தவறா
முதலில் பெறுவோம் உங்கள் ஆசை அறிந்தேன்.....

பெண்: நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான்

ஆண்: கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன

பெண்: கொஞ்சம் நாள் சென்று பின்பு தாயாக
நானாசை கொண்டேன் ஏன் கோபம்....

பெண்: நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான்

ஆண்: கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன

A little space to find your voice.

About Sonnalum Nallaa illa

Sonnalum Nallaa illa is a song from En Selvame (1985). Performed by Malaysia Vasudevan, S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer