Vanjikodi Poovanathu Song Lyrics

Inimai Idho Idho·1983

Inimai Idho Idho movie poster
Singer
S. Janaki
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: வஞ்சிக்கொடி.......பூவானது
யாரைக் கேட்டு ஆளானது
வஞ்சிக்கொடி.......பூவானது
யாரைக் கேட்டு ஆளானது
சோகம் வந்து தழுவும் இவளை
பேதை நெஞ்சில் தினமும் கவலை

பெண்: வஞ்சிக்கொடி... ஆ...ஹ...பூவானது
யாரைக் கேட்டு ஆளானது

பெண்: தேவைகள் தீர்க்கவா
நான் உன்னை நாடினேன்
பெண்மையின் காவலாய்
ஆண் துணை தேடினேன்
கைக் கொடுத்தால்......கண்ணகி நான்
கை விரித்தால் மாதவிதான்

பெண்: பூங்கொடிக்கு துணையிருந்தால்
வேறு பக்கம் சாயாது
காவிரிக்கு அணையிருந்தால்
வேறு திசை பாயாது
மேலாடை பூக்கள் கண்டால்
காமக் கண்கள் தாளாது

பெண்: வஞ்சிக்கொடி...ஆ......பூவானது
யாரைக் கேட்டு ஆளானது
சோகம் வந்து தழுவும் இவளை
பேதை நெஞ்சில் தினமும் கவலை

பெண்: வஞ்சிக்கொடி...ஹஹ...பூவானது
யாரைக் கேட்டு ஆளானது

பெண்: பாதையின்றி யாத்திரைகள்
விடிந்த பின்னும் ராத்திரிகள்

பெண்: கல்யாணம் இல்லாமல்
கைச்சேர்க்க ஆளுண்டு
பொன்தேகம் தீண்டாமல்
பூச்சூட யாருண்டு
தேனுண்ண வண்டு வந்தால்
கேள்வி கேட்கும் பூவின்று

பெண்: வஞ்சிக்கொடி.......பூவானது
யாரைக் கேட்டு ஆளானது
சோகம் வந்து தழுவும் இவளை
பேதை நெஞ்சில் தினமும் கவலை

பெண்: வஞ்சிக்கொடி... ஆ...ஹஹ...பூவானது
யாரைக் கேட்டு ஆளானது.....

A little space to find your voice.

About Vanjikodi Poovanathu

Vanjikodi Poovanathu is a song from Inimai Idho Idho (1983). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer