Aaduthu Perazhagu Song Lyrics

Rudra·1991

Movie
Rudra
Singer
K. S. Chitra and Chorus
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆடுது பேரழகு அற்புத தேரழகு
ஹோ ஆடுது பேரழகு அற்புத தேரழகு

குழு: சிட்டுக்கு ஏதும் வட்டம் இல்லை
சட்டங்கள் போடும் சுட்டி பிள்ளை

பெண்: ஆடுது பேரழகு அற்புத தேரழகு

குழு: ஆடுது பேரழகு அற்புத தேரழகு

முனங்கல்: ....................

பெண்: கல்லணை விட்டு வரும் காவிரி நான்
கற்பனை மெட்டு கட்டும் பாடகி நான்
வில்லினை விட்டு வரும் பாணங்கள் போல்
உள்ளதை சொல்ல வரும் நாயகி நான்

பெண்: என்றைக்கும் ஜெயிக்கும் எண்ணப்படி
ஏறட்டும் மேலே வெற்றி கொடி
ஹே ஹே

குழு: என்றைக்கும் ஜெயிக்கும் எண்ணப்படி

பெண்: ஆஹாஹ்

குழு: ஏறட்டும் மேலே வெற்றி கொடி

பெண்: பெண்ணுக்கு வேலியில்லை

குழு: ஆஹாஹ்

பெண்: கண்ணுக்கு காவலில்லை..

குழு: ஹெஹ்ஹ,...

பெண்: ஆடுது பேரழகு அற்புத தேரழகு ஓஹ்ஹ
ஆடுது பேரழகு அற்புத தேரழகு

பெண் & குழு: சிட்டுக்கு ஏதும் வட்டம் இல்லை
சட்டங்கள் போடும் சுட்டி பிள்ளை

பெண்: ஆடுது பேரழகு அற்புத தேரழகு

குழு: ஆடுது பேரழகு அற்புத தேரழகு

முனங்கல்: ....................

பெண்: உள்ளதை சொல்லிவிட நேரமென்ன
உள்ளத்தை விட்டு ஓடும் பாரமென்ன
பெண்ணுக்கும் வீரமுண்டு காவலென்ன
ஆணுக்கு கட்டுப்பட்டு போவதென்ன

பெண்: ஆணுக்கு பெண்கள் என்றும் மட்டமில்லை
பெண்களை கட்டி வைக்க சட்டமில்லை

குழு: ஆணுக்கு பெண்ணு என்றும் மட்டமில்லை
பெண்களை கட்டி வைக்க சட்டமில்லை

பெண்: என்றைக்கும் வாட்டமில்லை..

குழு: ஹேய் ஹேய்

பெண்: வாடிடும் கூட்டமில்லை..

குழு: ஆஹ்ஆஹ்...

பெண்: ஆடுது பேரழகு அற்புத தேரழகு ஓஹ்ஹ
ஆடுது பேரழகு அற்புத தேரழகு

பெண் & குழு: சிட்டுக்கு ஏதும் வட்டம் இல்லை
சட்டங்கள் போடும் சுட்டி பிள்ளை

பெண்: ஆடுது பேரழகு அற்புத தேரழகு

குழு: ஆடுது பேரழகு அற்புத தேரழகு

முனங்கல்: ஹேய்...ஹேய்....ஹயே..ஹே.ஹ்ஹ்ஹ

A little space to find your voice.

About Aaduthu Perazhagu

Aaduthu Perazhagu is a song from Rudra (1991). Performed by K. S. Chitra, Chorus. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer