Kannil Ondru Kanden Song Lyrics

Nerupukkul Eeram·1984

Singer
Malaysia Vasudevan and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: ..............................

ஆண்: கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா
ஊமை நெஞ்சம் ஏங்கும்போது நீ பாடு
ஊரில் உண்மை தூங்கும்போது நீ பேசு

ஆண்: கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா

பெண்: பாலும் கள்ளாய் மாறும் நீ தொடாமலே
பாவம் உன்னை சேரும் நீ செய்யாமலே

ஆண்: வாழ்க்கை என்னும் ஆசை தேன் பலாவிலே
சோகம் சிந்தும் ஏழை நான் இதோ இதோ

பெண்: நிலாக் காலம் இங்கே அமாவாசை ஆகும்
வசந்தங்கள் முள்ளாய் வளர்கின்ற கோலம்
காலதேவனே இது உந்தன் நீதியோ

பெண்: கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா

பெண்: கோடை நாளில் பாடும் தேன் குயில்களே
வாடைக் காற்றில் பேசும் பைங்கிளிகளே

ஆண்: பிள்ளை உள்ளம் எந்தன் நெஞ்சில் ஆடுதே
பேசும் வார்த்தை என்றும் நீதி தேடுதே

பெண்: ஒரே பாதை போகும் விதி போடும் வீதி
வழியெங்கும் சோகம் வரவேற்பு கூறும்
வானவீதியே தீயும் ஆனதே...

ஆண்: கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்

பெண்: மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா

ஆண்: ஊமை நெஞ்சம் ஏங்கும்போது நீ பாடு

பெண்: ஊரில் உண்மை தூங்கும்போது நீ பேசு

அனைவரும்: ...........................

A little space to find your voice.

About Kannil Ondru Kanden

Kannil Ondru Kanden is a song from Nerupukkul Eeram (1984). Performed by Malaysia Vasudevan, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Na. Kamarasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer